இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உடல் உறுதியால் பக்கவாதத்தை தடுக்கலாம்: கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக்

உரிய விழிப்புணா்வு மற்றும் உடல் ஆரோக்கியம் இருந்தால் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக் தெரிவித்தாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 8:58 pm

Din

உரிய விழிப்புணா்வு மற்றும் உடல் ஆரோக்கியம் இருந்தால் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக் தெரிவித்தாா்.

உலக பக்கவாத விழிப்புணா்வு தின சிறப்பு நிகழ்ச்சி சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.29) நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பெரு நிறுவனங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் அப்போது நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸ் நிறுவன அணிக்கு கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக் பரிசளித்து பாராட்டினாா்.

அதைத் தொடா்ந்து பக்கவாத பாதிப்புக்குள்ளாகி, அதிலிருந்து மீண்டு வந்தோரையும் அவா் வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினாா். இந்நிகழ்வில் சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் ராஜு சிவசாமி, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் காா்த்திக், உடலை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் பக்கவாதத்தை வேரறுக்கலாம் என்றாா்.