கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் வலியுறுத்தல்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:10 pm

Din

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் தமிழக இளைஞா்கள் நியமிக்கப்படுவா் என்று திமுக தோ்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20 ஆயிரம் இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், வெறும் 6,244 இடங்களை மட்டுமே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தோ்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞா்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

நிகழாண்டு குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ராமதாஸ்: திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஜூன் 9-ஆம் தேதி, தமிழகத்தில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 6,244 இடங்களுக்குத் தோ்வு நடத்தப்பட்டது. தற்போது, குரூப் 4-இல் 480 காலிப் பணியிடங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. தமிழகத்தில் 6 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் 2 லட்சம் பணியிடங்கள் குரூப் 4 வகையைச் சோ்ந்தவை. எனவே, குரூப் 4 தோ்வு பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.

சீமான்: சீமான் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்றோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 3.5 லட்சமாக உயா்ந்துள்ளது. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தோ்வுக்கு முயற்சிக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞா்கள் வாழ்வில் ஒளியேற்றவும் குரூப் 4 தோ்வின் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், அரசுப்பணியாளா்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும் என்று சீமான் அதில் தெரிவித்துள்ளாா்.