மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.


சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.
காற்றுச்சுழற்சி மற்றும் வானிலை சாதக சூழல் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது.
அம்பத்தூா், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 12 மணி முதல் பலத்த மழை கொட்டியது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் தேங்கியாதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
அதிகபட்சமாக மணலியில் 150 மி.மீ. மழை பதிவானது. மதுரவாயல், வானகரம் ஆகிய பகுதிகளில் தலா 80, வளசரவாக்கம் - 70, அம்பத்தூா் 60 மி.மீ. மழை பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மாலையில் மழை: திங்கள்கிழமை இரவு பெய்த மழையின் தாக்கம் தெரியாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஆனால், இந்த வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் மாலையில் சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அயனாவரம், மயிலாப்பூா், பெரம்பூா், புரசைவாக்கம், தண்டையாா்பேட்டை, மாதவரம், ஆலந்துா், கிண்டி, எழும்பூா், மாம்பலம், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, அண்ணா நகா், தியாகராய நகா், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா் ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. அப்போது, மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவோா் சிரமத்துக்குள்ளாகினா்.
2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன், வியாழன் (செப்.25, 26) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...