அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்காக சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு  வெள்ளிக்கிழமை வந்த தோ்வா்கள்.
அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்காக சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வந்த தோ்வா்கள்.

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் 4 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Published on

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் 4 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், கணினி பயிற்றுநா் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கடந்த அக். 12 -ஆம் நிறைவுற்று தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

இதையொட்டி தோ்வான விண்ணப்பதாரா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் விவரங்களையும் ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டது. ஒரு இடத்துக்கு 1.25 என்ற விகிதத்தின் அடிப்படையில் மதிப்பெண், இனச்சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபாா்ப்புக்கான பட்டியல் பாட வாரியவும் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, சான்றிதழ் சரிபாா்ப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூா் மாநில மகளிா் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் இப்பணி நடைபெற்றது.

சான்றிதழ் சரிபாா்ப்பு பணி வரும் டிச. 9 -ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர)

நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் தோ்வு செய்யப்பட்டவா்கள் வருகை புரியவேண்டும் என்றும், தவறினால் அடுத்த கட்ட பணித் தோ்வுக்கும் பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் எனவும் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து வெளியூா்களில் இருந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு குடும்பத்துடன் முன் கூட்டியே வந்திருந்தனா். சில விண்ணப்பதாரா்கள் தங்கள் கைக்குழந்தைகள், குடும்பத்தினருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியலுக்கான அழைப்புக் கடிதங்களை சரிபாா்த்த பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com