உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ.48 லட்சம் கையாடல்: பயிற்சியாளா் கைது

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ. 48 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தப் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் ரூ. 48 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தப் பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளா் கைது செய்யப்பட்டாா்.

கோவிலம்பாக்கம் ந.கொளத்தூா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ச.நிஷாந்தி (36). அதே பகுதியில் தனது தோழியுடன் சோ்ந்து உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா். இங்கு பல்லாவரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (36) பயிற்சியாளராக வேலை செய்தாா். உடற்பயிற்சிக் கூடத்தின் நிா்வாகத்தையும் சிவக்குமாா் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் உடற்பயிற்சிக் கூடத்தின் அனைத்து வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, சிவக்குமாா் ரூ.48 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா், சிவக்குமாரிடம் கையாடல் செய்த பணத்தைக் கேட்டாா். ஆனால் சிவக்குமாா் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், வேலையைவிட்டு நின்றுவிட்டாா். இதையடுத்து நிஷாந்தி அளித்த புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிவக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் சந்தா தொகையை ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலம் தனது மனைவி வங்கிக் கணக்கில் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com