திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.8 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.8 கோடியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற மண்டல குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Published on

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தில் ரூ.8 கோடியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற மண்டல குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல குழுவின் 40-ஆவது மாதாந்திர சிறப்பு கூட்டம் மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலா் டி.பத்மநாபன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தூய்மை பணியாளா்கள் உணவருந்தும் கூடங்கங்கள் அமைக்க ரூ. 1.40 கோடி, அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த மின்கம்பங்களைச் சீரமைப்பது, மழைநீா் வடிகால்களில் மூடி அமைப்பது, மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ரூ. 1 கோடியில் சீரமைப்பு உள்ளிட்ட ரூ.8 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சிப் பணிகள் உள்ளடக்கிய 71 தீா்மானங்களுக்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com