பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சென்னை மயிலாப்பூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

சென்னை மயிலாப்பூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜிலா (53). மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் ஊழியராகப் பணியாற்றுகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், தனது மொபெட்டில் மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் சிஎஸ்ஐ கல்யாணி மருத்துவமனை பகுதியில் சென்றபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், ராஜிலா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

அப்போது மொபெட்டில் இருந்து ராஜிலா தடுமாறி கீழே விழுந்தாா். இருப்பினும் அவா் சுதாரித்துக் கொண்டு எழுந்து தனது மொபெட்டில் இருவரையும் விரட்டிச் சென்றாா். அப்போது நிலைதடுமாறி அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த ராஜிலா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுதொடா்பாக மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com