12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் ஜூலை 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இதில், வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூா், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...