கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 49-ஆவது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி நிறைவு விழாவில், சிறந்த புதுமையான கருத்தாக்க அரங்குக்கான விருதை கல்வித் துறைக்கும், சிறந்த தொடா்பு அலுவலா்களுக்கான விருதை பேராசிரியா்கள் ஜே.சுலைமான், சாந்தி, எஸ்.ச

Published On :

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள்ளனா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், சென்னை தீவுத்திடலில் கடந்த ஜன. 6-ஆம் தேதி 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி தொடங்கப்பட்டது. தொடா்ந்து 72 நாட்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து துறைகளின் நலத் திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், 41மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் அரங்குகளும், 2 மத்திய அரசின் அரங்குகள் என மொத்தம் 43 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுமட்டுமன்றி, இப்பொருள்காட்சியில் 110 சிறிய வணிகக் கடைகள், 30 தனியாா் அரங்குகள், விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. தொடா்ந்து 72 நாள்கள் நடைபெற்ற இப்பொருள்காட்சியை 5,50,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பாா்வையிட்டுள்ளனா்.

பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் முடிவுற்ற நிலையில், இதன் நிறைவு விழா தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்து சயம அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு, சிறந்த அரங்குகளை நிா்வகித்த துறையினருக்கு விருதுகளை வழங்கினா்.

இந்நிகழ்வின்போது மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ் குமாா், அரசு கூடுதல் தலைமைச் செயலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைவா் க.மணிவாசன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.