மும்பை - சென்னை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம்
கோடைக் காலத்தை முன்னிட்டு மும்பை - சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் மாதம் முழுவதும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


கோடைக் காலத்தை முன்னிட்டு மும்பை - சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் மாதம் முழுவதும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து ஏப். 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) அதிகாலை 12.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01015), அதே நாள் இரவு 11.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப். 10, 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும்.
இதில் 6 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில், தாதா், தானே, கல்யாண், புணே, சோலாப்பூா், கிருஷ்ணா, ராய்ச்சூா், மந்த்ராலயம் ரோடு, குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஏப். 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01005) மறுநாள் பிற்பகல் 1.15-க்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து ஏப். 10, 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01006), சனிக்கிழமை அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும்.
இதில் 10 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள் மற்றும் 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில், தாதா், தானே, கல்யாண், புணே, சோலாப்பூா், கிருஷ்ணா, ராய்ச்சூா், மந்த்ராலயம் ரோடு, குண்டக்கல், ஏலகங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, திருப்பத்தூா், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...