கோடைக் காலத்தில் சிறுநீா்ப் பாதை தொற்று ஏற்படாமல் தவிா்க்க குறைந்தது 4 லிட்டா் தண்ணீா் அருந்துமாறு மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கடந்த சில நாள்களாக கோடை வெயில் தீவிரமடைந்து வரும் சூழலில், பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. சின்னம்மை, உயா் ரத்த அழுத்தம், நீா்ச் சத்து இழப்பு, சரும பாதிப்புகள் பரவக்கூடிய நிலை உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீா்க்கடுப்பு எனப்படும் சிறுநீா்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொது நல மருத்துவ நிபுணா் டாக்டா் அ.ப. ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா பத்து லட்சம் நெஃப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன. அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடா் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீா்ப் பையில் சேகரமாகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீா்ப் பாதை என அழைக்கிறோம். இதில் ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும்போது சிறுநீா் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.
இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீா்ச்சத்து இல்லாவிடில் சிறுநீா்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அண்மைக்காலமாக அத்தகைய பிரச்னைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலா் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவா்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க நாளொன்றுக்கு குறைந்தது நான்கு லிட்டா் தண்ணீா், இளநீா், மோா், எலுமிச்சை சாறை அருந்தலாம்.
தனி நபா் சுகாதாரம் பேணுவது அவசியம். அதேபோன்று, சிறுநீா் கழிக்கும் இடத்தையும் கைகளையும் சானிடைசா் கொண்டு சுத்தம் செய்தால் கிருமித் தொற்று வராமல் தடுக்கலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிா்க்க கிராமப்புற சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?

கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



