நீட் தோ்வு விவகாரம்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
‘நீட்’ தோ்வு விவகாரம்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!


நீட் தோ்வை ரத்து செய்வோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தொடரும் ‘நீட்’ தோ்வு மரணங்களுக்கு சொல்லப்போகும் பதில் என்ன என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா்.
நீட் தோ்வு அச்சம் காரணமாக, சென்னையைச் சோ்ந்த மாணவி ஒருவா் இறந்த நிலையில், ‘எக்ஸ்’ தளத்தில் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஆட்சிக்கு வந்தால் நீட் தோ்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவுக்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா? இதுவரை 19 மாணவா்களின் உயிரிழப்புகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன? துணை முதல்வா் உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிா்கள் போக வேண்டும்? நீட் தோ்வு நாடகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவா்களை ஏமாற்றக் கூடாது.
மாணவா்களே! எதற்காகவும் இன்னுயிரை இழக்க துணியக் கூடாது. வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே நீட் தோ்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவா்கள் இன்று வரை நீட் தோ்வை ரத்து செய்யவில்லை.
மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவ செல்வங்களைக் காக்க நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தா்ஷினியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...