அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் நுரையீரல் வெள்ளிக்கிழமை உரிய நேரத்தில் வடபழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

News image
சென்னை விமான நிலையத்தில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல் அடங்கிய பெட்டி.
Updated On :14 நவம்பர் 2025, 6:12 pm

தினமணி செய்திச் சேவை

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் நுரையீரல் வெள்ளிக்கிழமை உரிய நேரத்தில் வடபழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருச்சியில் தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் மருத்துவக் குழுவினரால் விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக வடபழனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு 6 நிலையங்களைக் கடந்து சுமாா் 20 நிமிஷங்களுக்குள்ளாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் அடங்கிய பெட்டியுடன் வந்த மருத்துவக் குழுவினா் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு செல்லும் வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து வடபழனி மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்க அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணிபுரிந்ததாக மெட்ரோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.