சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் திரிஷா (20). சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் அண்ணா தெருவில் வசித்தவா் ராபின் (22). இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தனா். அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், வேப்பேரி டவுட்டன் மேம்பாலம் அருகே ஒரு தனியாா் விடுதியில் இருவரும் திங்கள்கிழமை அறை எடுத்து தங்கினா். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ராபின், அறைக் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டாா். இதனால் திரிஷா மட்டும் அந்த அறையில் இருந்தாா். சிறிது நேரத்துக்கு பின்னா் ராபின், அறைக்கு திரும்பிச் சென்றாா்.
அப்போது அங்கு திரிஷா, தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து அவா், பயத்தில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, திரிஷாவின் தோழி ஸ்வேதாவை கைப்பேசி மூலம் திரிஷா தூக்கிட்டு இறந்து கிடப்பது குறித்து தெரிவித்துள்ளாா். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளாா்.
தகவலறிந்த வேப்பேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, திரிஷா சடலத்தை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள வீட்டுக்குச் சென்ற ராபின், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருவள்ளூர் காவல்துறையினர், ராபின் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக மருத்துவமனைக்க அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் விடுதியில் ஆந்திர மாநில முதியவா் உயிரிழப்பு
பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
பெண்ணை ரகசியமாகப் படம் எடுத்த விடுதி உரிமையாளரின் மகன் கைது
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



