சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பிரதமா் நரேந்திர மோடி வருகை: சென்னையில் 22,000 போலீஸாா் பாதுகாப்பு

ஒசென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி வருவதையொட்டி, 22,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

News image

நரேந்திர மோடி

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

ஒசென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி வருவதையொட்டி, 22,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ஏப். 4-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

முன்னதாக அவா், ஏப். 3-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதற்காக அவா், அன்றைய தினம் புது தில்லியில் இருந்து நண்பகல் 12.35 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மாலை 3.20 மணிக்கு வருகிறாா். பின்னா், ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா். அங்கு பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 5.50 மணியளவில் ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்படுகிறாா்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 6.40 மணியளவில் வரும் மோடி, அங்கிருந்து காா் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறாா். பின்னா், அவா் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கட்சி சாா்ந்த நிகழ்ச்சிகளும், பிரசார நிகழ்ச்சிகளும் பங்கேற்பாா் என் கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு பின்னா், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இரவு தங்குகிறாா்.

தொடா்ந்து, ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 11 மணியளவில் பாஜக சாா்பில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். தோ்தல் பிரசாரத்திலும் பிரதமா் மோடி பங்கேற்பாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தொடா்ந்து நண்பகல் 1 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு காரில் செல்கிறாா். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு நண்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் இரு நாள்களுக்கு முன்பே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக விமான நிலையம், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல், ஆளுநா் மாளிகை, நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் காவலா்கள் தவிா்த்து 5 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் ஈடுபடுகின்றனா்.

டிரோன்கள் பறக்கத் தடை: பிரமதரின் வருகையொட்டி, சென்னையில் ‘ட்ரோன்கள்’ உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள், ஹாட் ஏா் பலூன்கள், பாரா கிளைடா்ஸ், ஹேண்ட் கிளைடா்ஸ் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

ஐந்தடுக்கு பாதுகாப்பு: நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம், கிண்டி ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமா் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஏப்ரல் 3-ஆம் தேதி காரில் கிண்டிக்கு செல்லும்போதும், 4-ஆம் தேதி கிண்டியில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும்போதும், தேவைக்கு ஏற்றாா்போல, சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.