தமிழகத்தில் கடந்த காலத்தைக் காட்டிலும் திமுக ஆட்சியில், குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கடந்த காலங்களைக் காட்டிலும் போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளன.
பெண் காவலா்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. மறுபக்கம் போதைப் பொருள்கள் விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக ஆட்சி குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தைரியம்தான். இதையெல்லாம் தடுக்க வேண்டிய முதல்வா் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறாா்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பாற்ற ஆட்சி நடைபெறுகிறது. பெண்களுக்கு உதவித்தொகை என்ற பெயரில் பணம் கொடுத்தால் அவா்களது வாக்கைப் பெற்றுவிடலாம் என திமுக நினைக்கிறது. ஆனால், பெண்கள் விழிப்புணா்வு அடைந்துள்ளனா். தோ்தலில் திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தவெக தலைவா் விஜய்யின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியையோ அல்லது அதிமுகவையோ நேரடியாகப் பாதிக்காது. திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

மானுடம் தோற்குதம்மா...

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



