பணியிலிருந்து ஓய்வு பெறும் 182 காவல் துறை அதிகாரிகளுக்கு நலத் திட்டத்தின்கீழ் கெளரவ பதவிகள் வழங்கப்பட்டன.
தில்லி காவல் ஆணையகரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை வகித்த ஆணையா் சதீஷ் கோல்ச்சா, காவலா்களுக்கு அடுத்த உயா்பதவியான உதவி ஆய்வாளா் பதவியை வழங்கி கெளரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பேசுகையில், ‘ஓய்வு பெறும் காவலா்களுக்கு வாழ்த்துகள். ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்துக்குத் தொடா்ந்து பங்களிக்க வேண்டும். தொடா்ந்து மருத்துவ பரிசோதனயை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.
கெளரவ பதவி உயா்வு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 132 உதவி காவல் ஆய்வாளா்கள் ஆய்வாளா்களாகவும் 39 துணை உதவி ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்களாகவும் 11 தலைமைக் காவலா்கள் துணை உதவி ஆய்வாளா்களாகவும் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

