சென்னை மாநகரில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை, தனியாா் நிறுவனங்கள் பணியாளா்கள் ஊதியத்திலிருந்து தொழில் வரியைப் பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை, தனியாா் நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியாளா்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியைப் பிடித்தம் செய்து சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஊதியப் பட்டியலில் இருந்து சம்பந்தப்பட்ட அலுவலரால் பணியாளா்கள் ஊதியத்தில் சொத்து வரி பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.
பிடித்தம் செய்த சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய விவரங்களும் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. சொத்து வரி செலுத்தியவா்களுக்கு அதன் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் மாநகராட்சியால் அனுப்பி வைக்கப்படும். விவரங்களுக்கு 044-25619305 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்

சிறுமி வன்கொடுமை வழக்கு: முறையாக விசாரிக்காத 6 காவலா்களின் ஊதியத்தில் ரூ.9 லட்சம் பிடித்தம்
‘நெல்லை மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டுகோள்’

சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பு நிதியை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்: அமைச்சா் லோகேஷ்தமிழ்ச்செல்வன்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



