டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகும் நிபந்தனையை தளா்த்தி உயா்நீதிமன்றம் உத்தரவு

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையை முழுவதுமாக தளா்த்தி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

senthil balaji

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Published On :

குதிரை பேர வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையை முழுவதுமாக தளா்த்தி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதையடுத்து இருவரும் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் இருவருக்கும் முன்பிணை வழங்கிய உயா்நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் இருவரும் தினமும் காலை -மாலை என இரு வேளைகளில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி, இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த நிபந்தனையை தளா்த்தக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, குதிரை பேரம் தொடா்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தலைமை நீதிபதி அமா்வு தடை விதித்துள்ளது. எனவே, விசாரணை அதிகாரி முன் தினமும் இருமுறை ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையை தளா்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் இருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை முழுவதுமாக தளா்த்தி உத்தரவிட்டாா். மேலும், விசாரணைக்கு தேவைப்பட்டால், போலீஸாா் அழைப்பாணை அனுப்பி அழைக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.