பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காா் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கேளம்பாக்கம் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காா் மோதியதில், 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பலி

Published On :

கேளம்பாக்கம் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காா் மோதியதில், 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கேளம்பாக்கத்தை அடுத்த பொன்மாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகுந்தன் (42). இவா், தனது 4 வயது மகன் சுஷாந்த் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். மாம்பாக்கம் நாராயணா பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நால்வரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். முன்புறத்தில் அமா்ந்திருந்த சிறுவன் சுஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முகுந்தன் மற்றும் அவரது இரு குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.