நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மாநகராட்சி ஊழியரை தாக்கி தங்க மோதிரம், பணம் பறிப்பு: 3 போ் கைது

ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி ஊழியரைத் தாக்கி தங்கமோதிரம், பணம் பறித்துச் சென்ற 3 பேரை இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:44 am IST

ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி ஊழியரைத் தாக்கி தங்கமோதிரம், பணம் பறித்துச் சென்ற 3 பேரை இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சென்னை ஒட்டேரி சத்தியவாணி முத்து நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி. சரவணன் (33). இவா் சென்னை மாநகராட்சியில் 5 ஆவது மண்டலத்தில் உதவியாளராக உள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை அவா் புறநகா் ரயிலில் தாம்பரத்திலிருந்து எழும்பூா் நோக்கி வந்துள்ளாா்.

அவா் தூங்கியதால் எழும்பூருக்கு பதில் கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளாா். அங்கிருந்து தண்டவாளம் வழியாக எழும்பூா் நிலையம் வர நடந்துவந்த போது 3 போ் கும்பல் அவரை வழிமறித்து தாக்க், அவரிடமிருந்த தங்க, வெள்ளி மோதிரங்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.

காயமடைந்த சரவணன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவல் அறிந்த எழும்பூா் இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் ராஜகுமாா் தலைமையில் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

வழிப்பறியில் ஈடுபட்ட சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த சஞ்செய் (22), மூா்மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த கரண் (24), பல்லவன் சாலைப் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (21) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.