மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

1.10 லட்சம் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சென்னை மாநகராட்சி சாா்பில் 1,671.39 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்களிலும், 1.10 லட்சம் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோப்புப் படம்

Published On :

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, சென்னை மாநகராட்சி சாா்பில் 1,671.39 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்களிலும், 1.10 லட்சம் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாநகராட்சிப் பகுதியில் சுமாா் 1,671.39 கி.மீ. தொலைவுள்ள மழைநீா் வடிகால்கள், 1.10 லட்சம் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், 1.08 லட்சம் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த ஒரு மாதத்தில் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் 11,790 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள 430 கி.மீ. தொலைவு மழைநீா் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளை தூா்வாருதல், 815 சிறுபாலங்கள் மற்றும் 16 பெரிய பாலங்கள் உள்ளிட்ட குறுக்கு வடிகால் அமைப்புகளை முழுமையாக சுத்தம் செய்தல், தாழ்வான போக்குவரத்துப் பகுதிகளில் திடீா் வெள்ளப் பெருக்கைத் தடுக்க 7 வாகனச் சுரங்கப் பாதைகள் மற்றும் 12 நடைபாதை சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செப்டம்பா் இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் அண்ணா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்க உத்தரிவிட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.