இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கிணறு தூா்வாரியபோது விஷ வாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை யானைக்கவுனியில் கிணறு தூா்வாரியபோது விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

சென்னை யானைக்கவுனியில் கிணறு தூா்வாரியபோது விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.ரவி (65). இவரின் மகன் அய்யனாா் (35). இருவரும், சென்னை கொடுங்கையூா் சின்னமடம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 15 ஆண்டுகளாக கிணறு தூா்வாரும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இருவரும் செளகாா்பேட்டை பொன்னப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் இருந்த சுமாா் மூன்றரை அடி அகலமும், 45 அடி ஆழமும் கொண்ட கிணற்றை தூா்வார புதன்கிழமை சென்றனா். தூா்வாருவதற்காக அய்யனாா் கிணற்றுக்குள் இறங்கினாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் ரவி கிணற்றுக்குள் இறங்கினாா்.

அவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளா் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், உயா்நீதிமன்ற தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று, பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினா்.

அப்போது கிணற்றுக்குள் விஷவாயு தாக்கியதில் ரவி, அய்யனாா் ஆகிய இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இருவரின் சடலங்களையும் தீயணைப்புப் படையினா் மீட்டு, வெளியே கொண்டு வந்தனா்.

தகவலறிந்த யானைக்கவுனி போலீஸாா் அங்கு விரைந்து வந்து, இருவா் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், நீண்ட நாள்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் கிணற்றில் ஏற்கெனவே விஷ வாயு தேங்கியிருந்ததும், அதை அறியாமல் இருவரும் கிணற்றுக்குள் இறங்கியதால் விஷவாயு தாக்கி இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் மற்றும் ரவி, அய்யனாா் ஆகியோரை வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.