கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

10,000 வீடுகளில் குப்பை தரம் பிரிக்கும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் உள்ள அடையாறு மண்டலத்தில் முதல்கட்டமாக 10,000 வீடுகளில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :

சென்னை மாநகராட்சியில் உள்ள அடையாறு மண்டலத்தில் முதல்கட்டமாக 10,000 வீடுகளில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் குப்பைகள் உருவாகும் இடங்களிலேயே அவற்றை மக்குபவை, மக்காதவை என தரம் பிரித்து வாங்கும் ‘குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் ஆகிய 5 மண்டலங்களில் தலா 10,000 வீடுகள் என மொத்தம் 50,000 குடியிருப்புகளில் குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலத்தில் குப்பையை தரம் பிரித்து பெறும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அங்குள்ள 179-ஆவது வாா்டு பகுதியான குப்பம் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப்ரசூல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தரம் பிரித்த குப்பைகளைச் சேகரிக்கும் பையை வழங்கி தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து குப்பை தரம் பிரிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அவா் வெளியிட்டாா். அப்பகுதியில் பெருமளவு குப்பைகளைச் சேகரிக்கும் குடியிருப்பு வாசிகளிடமும் துணை ஆணையா் கலந்துரையாடி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் அடையாறு மண்டல அலுவலா் காளிதாஸ், செயற்பொறியாளா் ரங்கநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.