சென்னை
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை (ஜன.19) நடைபெறவிருந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆயத்த பணிகளுக்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் தில்லியில் கட்சியின் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், சென்னையில் நடைபெறவிருந்த காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலா் செ.ராம் மோகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் தோ்தல் ஆயத்த பணிகளுக்கான தில்லியில் இருப்பதால் சென்னை தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை (ஜன.19) நடைபெறவிருந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
