மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் மீது பொய் வழக்கு: கட்டுப்பாட்டு அறைக்கு 3 காவலர்கள் மாற்றம்

சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில், 3 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்றதாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில், 3 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

மயிலாப்பூர் காவல் நிலைய தனிப்படை போலீஸார், மயிலாப்பூர், பிடாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதா (36) என்பவர் தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வைத்து விற்றதாக கடந்த டிச.24}ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் தனிப்படையைச் சேர்ந்த 3 காவலர்கள் வனிதா மீது பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், வனிதா மீது 12 வழக்குகள் இருப்பதும், தற்போது அவர் திருந்தி தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. அவரிடம் தனிப்படை காவலர்கள் பணம் கேட்டபோது, அவர் வழங்காததால் கோபமடைந்த தனிப்படை போலீஸார், அவரை பொய் வழக்கில் சிக்க வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை தலைமைக் காவலர் வினோத்குமார், முதல்நிலைக் காவலர் பிரகலநாதன், காவலர் செல்வக்குமார் ஆகிய 3 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.