பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரூ.60 கோடியில் நான்குவழி சாலைப் பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

News image
சென்னை ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்குவழி சாலைப் பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம்,
Updated On :23 ஜனவரி 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ரூ.60 கோடியில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நான்குவழி சாலைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சாா்பில் மந்தைவெளியில் ரூ.167.9 கோடியில் பேருந்து பணிமனை, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 6,625 ச.மீ. நிலப்பரப்பிலும், வணிக வளாகக் கட்டடம் 29,385 ச.மீ. பரப்பளவிலும் கட்டப்படவுள்ளன. இந்தக் கட்டடம் ஒரு தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ரூ.60 கோடியில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நான்குவழி சாலைப் பாலம் திறப்பு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த இரு நிகழ்வுகளிலும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கான அடிக்கல்லை நாட்டி, நான்கு வழிச்சாலைப் பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், போக்குவரத்து துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், மாநகா் போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநா் டி.பிரபு சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.