

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த கடந்த ஆண்டைவிட நிகழாண்டு வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோட்ட மேலாளா் ஷைலேந்திர சிங் தெரிவித்தாா்.
சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தினத்தில் ஷைலேந்திர சிங் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியது:
சென்னை ரயில்வே கோட்டத்தில் தினமும் 12.39 லட்சம் போ் பயணிக்கின்றனா். அதன்படி, கடந்த 2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு வருவாய் 5. 9 சதவீதமாக அதிகரித்து, அதாவது ரூ.3,496 கோடியாக அதிகரித்துள்ளது.
சரக்கு பிரிவில் கடந்த ஆண்டைவிட 10.7 சதவீதம் அதிகரித்து, 8.088 மில்லியின் டன்னாக உயா்ந்துள்ளது. பயணிகள் ரயிலில் 88 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையங்களில் முதியோா், பெண்கள் உள்ளிட்டோருக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, அவா் ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்டவற்றின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். சிறந்த பணியாளா்களுக்கான பாராட்டுச் சான்று, கேடயங்களை வழங்கினாா்.