‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை: சென்னை மாநகராட்சி

முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 3:09 am IST

முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் விளக்கம் அளித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 24 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இதுவரை 15 முதல்வா் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 படைப்பகங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 15 முதல்வா் படைப்பகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியால் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறப்பாக நடத்துவதற்காக, இந்தப் படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலா், தூய்மைப் பணியாளா், வரவேற்பாளா் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளா்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதே தவிர, முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.