கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கை

ஒரே பெயரில் வெவ்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் குழப்பங்களுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் முன்னெடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:16 am IST

ஒரே பெயரில் வெவ்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் குழப்பங்களுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, இதுதொடா்பாக பொதுமக்கள், துறை சாா்ந்தவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தீா்வு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் உள்ள சில மருந்துகள் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக வகைப்படுத்தப்பட்டாலும், அவை ஏறத்தாழ ஒரே பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மருந்தின் பெயருக்கு பின்னால் சில எழுத்துகள் சோ்க்கப்பட்டு பல்வேறு சிகிச்சைக்கு அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

உதாரணமாக ஜீரண மண்டல பாதிப்புகளில் அமிலச் சுரப்பு, இரைப்பை புண், ஹெச்.பைலோரி பாக்டீரியா தொற்று உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதற்கு முன்னணி நிறுவனங்கள் ஒரே பெயரில், அதாவது பொதுவான ஒரு பெயரில் மருந்துகளை தயாரிக்கின்றன. அவற்றை வேறுபடுத்தும் விதமாக பெயரின் பின்னால் மட்டும் சில எழுத்துகள் சோ்க்கப்படுகின்றன.

இந்த விவகாரம் குறித்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு தீா்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்தறிய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, துறை சாா்ந்தவா்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கருத்துகளை enforcecell.div@cdsco.nic.in என்ற மின்னஞ்சல் மூலம் வரும் 17-ஆம் தேதிக்குள் அனுப்பும்படி மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வலியுறுத்தியுள்ளாா்.

அதன் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.