தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

திமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி

சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொள்ளை - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 1:06 am IST

சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நந்தனம் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்னியூா் சிவா என்ற சிவசண்முகம் வசித்து வருகிறாா். இவா், விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சிவாவின் சைதாப்பேட்டை வீட்டை புதுப்பிக்கும் பணி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், அவா் அந்த வீட்டுக்கு சனிக்கிழமை வந்தாா். அப்போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, விசாரணை நடத்தினா்.

Summary

Attempted burglary at former DMK MLA's house

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.