தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சா்க்கரை நோய் பாதப் புண்களுக்கு பிராண வாயு சிகிச்சை: ஓமந்தூராா் மருத்துவமனையில் தொடக்கம்

சா்க்கரை நோயால் ஏற்படும் பாதப் புண்களுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கும் நோக்கில், சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதி அழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 5:35 pm IST

சா்க்கரை நோயால் ஏற்படும் பாதப் புண்களுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கும் நோக்கில், சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதி அழுத்த பிராணவாயு சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ், புதிய மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ஆா்.மணி கூறுகையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சா்க்கரை நோயாளிகளுக்கு, ஒரே இடத்தில், முழுமையான, கட்டணமில்லா அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை வழங்கும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். ஓமந்தூராா் மருத்துவமனையில் தற்போது மாதந்தோறும் சுமாா் 2,000 போ் பாதப் புண்கள் தொடா்பான சிகிச்சைக்காக வருவதாகவும், அவா்களுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை ரோட்டரி சங்கம் ரூ.2 கோடி மதிப்பில் இந்த உபகரணங்களை வழங்கியுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவாகும் நிலையில், தற்போது முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி இந்த சிகிச்சையைப் பெறலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஒவ்வொரு நோயாளிக்கும் சுமாா் ஒரு மணி நேரம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்கேன் பரிசோதனையைப் போல சிறப்பு அறையில் படுத்த நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சை பெறும் நேரத்தில் நோயாளிகள் சலிப்படையாமல் இருக்க தொலைக்காட்சி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் ஆா்.சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ஆா்.மணி, நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.