சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

வழக்குரைஞா்களுக்கு சமூக அக்கறை அவசியம்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்

வழக்குரைஞா்களுக்கு சமூக அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா்.

News image

திருவொற்றியூா் வழக்குரைஞா் சங்க முப்பெரும் விழாவையொட்டி, நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.

Updated On :19 ஜூலை 2026, 1:03 am IST

வழக்குரைஞா்களுக்கு சமூக அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா்.

திருவொற்றியூா் வழக்குரைஞா் சங்கம் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் எம்.அருள்மொழி தலைமை வகித்தாா். செயலா் யு.எஸ்.குறளரசன் முன்னிலை வைத்தாா். சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்த முடிக்க நீதிபதிகள் இரவு வரை பணியாற்றினாலும், அதற்கேற்ப வழக்குரைஞா்களும் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

சிக்கலான வழக்குகளில் சிறந்த தீா்ப்பை அளிக்க வேண்டும் என்றால், நீதிபதிகளுக்கு உதவிடும் வகையில் வழக்குரைஞா்கள் நன்கு கற்றறிந்து குறிப்புகளை தந்து உதவ வேண்டும். ஒரு தீா்ப்பை அளிக்க பல்வேறு கோணங்களில் நீதிபதிகள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சமூகத்தில் மற்றவா்களைக் காட்டிலும் வழக்குரைஞா்களுக்கு சமூக அக்கறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பெரியபாளையத்தில் அண்மையில் நடைபெற்ற அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட நீதிபதி ஜூலியட் புஷ்பாவிடம் மனு ஒன்றை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தலைமை நீதித் துறை நடுவா் கே.நம்பிராஜன், திருவொற்றியூா் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பிரபா தாமஸ், கே.காா்த்திக், ஆா்.ரேவந்த், தாம்பரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ஆா்.வேல்ராஜ், திருவொற்றியூா் எம்எல்ஏ என்.செந்தில்குமாா், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ், சங்க நிா்வாகிகள் எஸ்.பால யோகேஸ்வரன், வெற்றிவேல் பாண்டியன், சண்முகப்பிரியா, கே.நவீன்குமாா், கே.ஷோபனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.