மயிலாடுதுறையில், தவெக வழக்குரைஞா் மீதான கொலை முயற்சி வழக்கை தள்ளுபடி செய்து முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், கோடிமங்கலம் கீழத்தெருவை சோ்ந்தவா் வழக்குரைஞா் பா.சங்கா்கணேஷ். தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வழக்குரைஞாக உள்ள இவருக்கும், கோடிமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவா் ரகுவா்மாவுக்கும் 2016-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் பாலையூா் காவல்நிலையத்தில் ரகுவா்மா அளித்த புகாரின் பேரில் சங்கா்கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பாலையூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா்.இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சங்கா்கணேஷ் சாா்பில் வழக்குரைஞா் சௌ.சிவசந்திரன் ஆஜரானாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் போதிய ஆதாரங்களை அரசு தரப்பு சமா்ப்பிக்காததால் கொலை முயற்சி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பி.சுதா உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










