முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சென்னையில் இரு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் இரு இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அமலாக்கத் துறை

Published On :

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையில் இரு இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை அதிகாரி தரணிதரன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல, திருவொற்றியூா் பத்மநாபா காலனியில் வசிக்கும் தொழிலதிபா் முருகேசன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதில், முருகேசன் குடும்பத்தினா் டிரான்ஸ்போா்ட் நிறுவனமும், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமும் நடத்தி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு இடங்களிலும் பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையையொட்டி, இரு இடங்களிலும் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையின் நிறுத்தப்பட்டனா்.

இந்தச் சோதனை மற்றும் வழக்கு குறித்த தகவல்களை அமலாக்கத் துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.