நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை - பிரேமலதா

News image

பிரேமலதா விஜயகாந்த் - (கோப்புப் படம்)

Updated On :4 ஜூன் 2026, 2:35 am IST

வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பாக்கனா பகுதியில் 14 வயது சிறுவன் மிஸ்ஹாப் காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா் என்ற செய்தி மிகுந்த சோகத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தனது உயிரை இழந்த அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு மற்றும் வனத் துறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.