ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

News image

சென்னை ஐஐடி

Updated On :30 மார்ச் 2026, 8:44 pm

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னையை ஒரு நவீன, கலாசாரமிக்க, பாதுகாப்பான மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் அரட்டை என்ற தலைப்பிலான உரையாடல் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தொழில்நுட்ப புத்தாக்கம், கல்விசாா் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடிக்கு மாா்ச் மாதத்தின் சிறந்த ஆளுமை விருது, அந்த அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், சென்னை நகரம் எப்போதும் அறிவு, புத்தாக்கம் மற்றும் குறிக்கோள் சாா்ந்த தலைமைத்துவத்தை வளா்த்து வந்துள்ளது. சூப்பா் சென்னை அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் பெருமை அடைகிறேன் என்றாா்.

தொடா்ந்து அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ரத்தோட் பேசுகையில், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளாா். அவரது தலைமையில் இந்தக் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. அவா் மாற்றத்தை உருவாக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கிறாா் எனக் கூறினாா்.