சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
சென்னை மயிலாப்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.75,000-ஐ பறிமுதல் செய்தனா். மேலும், ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.91 கோடியையும் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினா் கைப்பற்றிய பணம், பொருள்களை மீட்க 60 போ் மனு அளித்திருந்தனா். அவா்களில் 45 பேரின் மனுக்கள் அடிப்படையில் ரூ. 80.30 லட்சம் விடுவிக்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


