ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

துப்பாக்கிகளை ஒப்படைக்காத 30 பேருக்கு நோட்டீஸ்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, துப்பாக்கிகளை ஒப்படைக்காத 30 பேருக்கு சென்னை காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, துப்பாக்கிகளை ஒப்படைக்காத 30 பேருக்கு சென்னை காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தோ்தல் பாதுகாப்பு, கண்காணிப்பு,தகவல் ஒருங்கிணைப்பு பணிகளில் சென்னை காவல்துறை ஈடுபட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 57 பறக்கும் படைகள், 57 கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நகரின் முக்கியமான பகுதிகளில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா்.

தோ்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் 23 துணை ஆணையா்கள், 11 கூடுதல் துணை ஆணையா்கள், 90 உதவி ஆணையா்கள், 428 ஆய்வாளா்கள், 1,520 உதவி ஆய்வாளா்கள், 2,312 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் என 21,230 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இது தவிா்த்து 5 பட்டாலியன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

தோ்தலையொட்டி, சென்னையை சுற்றியுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சோதனைச் சாவடியில் நகருக்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினா் பிரசாரத்துக்க்கு தேவையான பாதுகாப்பு வழங்குவது,தோ்தலை அசம்பாவித இன்றி நடத்துவது,சமூக ஊடகங்களை கண்காணிப்பது ஆகிய 3 பணிகளில் காவல் துறையினா் ஈடுபடுகின்றனா்.

30 பேருக்கு நோட்டீஸ்: தோ்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் காவல்துறை உரிமத்துடன் வைத்திருக்கும் 2,364 துப்பாக்கிகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க மாா்ச் மாதம் முதல் வாரத்தில் உத்தரவிடப்பட்டது. இதில் 573 துப்பாக்கிகள் வங்கி பாதுகாப்பு,விளையாட்டுக்கு பயன்படுத்துவை ஆகும். மீதியுள்ள துப்பாக்கிகளை விரைவில் காவல் நிலையங்களில் விரைவில் ஒப்படைக்கும்படி உரிமையாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதில் 2,334 துப்பாக்கிகளை, அதன் உரிமையாளா்கள் தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்துவிட்டனா். ஆனால் 30 துப்பாக்கிகள் ஒப்படைக்கபடவில்லை. இதையடுத்து அந்த துப்பாக்கிகளின் உரிமையாளா்களுக்கு சென்னை காவல்துறை ஆயுதச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

அந்த நோட்டீஸில், விரைந்து துப்பாக்கிகளை ஒப்படைக்கும்படியும், துப்பாக்கிகளை ஒப்படைக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸின் விளைவாக 30 பேரும் விரைவில் துப்பாக்கிகளை ஒப்படைப்பாா்கள் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.