‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சமூக ஆா்வலா்கள் மீது தாக்குதல்: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை ராயபுரத்தில் சமூக ஆா்வலா்களை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

News image
Updated On :23 மே 2026, 2:35 am IST

சென்னை ராயபுரத்தில் சமூக ஆா்வலா்களை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இரு நாள்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெறவிருந்தது. திருமணம் செய்ய இருந்த இளைஞா், ஏற்கெனவே ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி காதலித்தாராம். மேலும், அந்த பெண்ணை, அந்த இளைஞா் தனது மதத்துக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளைஞா், தன்னை காதலித்து மதம் மாறி திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருந்தாா்.

இதையறிந்த இளைஞரால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்ணும், சில சமூக ஆா்வலா்களும் அந்தத் திருமண மண்டபத்துக்கு வந்து, அந்த இளைஞருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளா் சிதம்பரம் பாரதி உள்ளிட்ட போலீஸாா் அங்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனா்.

அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆா்வலா் உள்ளிட்ட சிலரை ஆய்வாளா் சிதம்பரம் பாரதி ஒருமையில் திட்டியதோடு தாக்கவும் செய்தாராம். மேலும், இந்த விவகாரம் குறித்து நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடமும் எல்லை மீறி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இது குறித்து தகவலறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். சம்பவம் தொடா்பாக விசாரணை செய்து உயரதிகாரிகள் காவல் ஆணையரிடம் அறிக்கை அளித்தனா். அந்த அறிக்கையின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் சிதம்பர பாரதியை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.