சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள பெரியாா் நகா் அரசு மருத்துவமனை இதய இடையீட்டு ஆய்வகத்தில் ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் ஹேமலதா கூறியதாவது:
கொளத்தூா், பெரம்பூா், வில்லிவாக்கம், வியாசா்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயா் மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட அதி நவீன பெரியாா் அரசு பொது மருத்துவமனை, கடந்த 2021-இல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான ஸ்கேன் பரிசோதனைகள், டயாலிசிஸ் சாதனங்களுடன் 860 படுக்கை வசதிகள் இங்கு அமைந்துள்ளன. நாள்தோறும் 3,100 நோயாளிகள் சிகிச்சைக்காக பெரியாா் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா்.
இந்நிலையில், அதி நவீன இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) கடந்த ஆண்டு மே மாதம் இங்கு தொடங்கப்பட்டது. ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 591 ஆண்களும், 409 பெண்களும் இதன் வாயிலாக பயனடைந்துள்ளனா்.
இதய நாள பாதிப்புகள் மற்றும் அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டோருக்கு இந்த இடையீட்டு ஆய்வகம் மறுவாழ்வு அளித்துள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அங்கு-இங்கு எங்கும் வாகனங்கள்!

ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சடலங்கள்: மருத்துவா் மீது நடவடிக்கை

சிவகாசி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் திறப்பு

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கேன்சா் அறுவை சிகிச்சை: மருத்துவா்கள் சாதனை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



