டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தியாகராய நகரில் தீபாவளி விற்பனை: ‘ட்ரோன்’ மூலம் கூட்ட நெரிசல் கண்காணிப்பு

சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது.

Updated On :

சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபா்களை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தப்படுகிறது.

சென்னையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் திரளுகின்றனா்.

இதைப் பயன்படுத்தி திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 600 போலீஸாா் கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இங்கு 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியை சீராக செய்வதற்கு ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் தற்காலிகமாக இரு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை அடையாளும் காணும் கேமராக்கள்: ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான கடைகள் இருக்கும் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் ஃஎப்ஆா்எஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டது ஆகும். இந்த தொழில்நுட்பத்தின்படி இந்த கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினியில், திருட்டு வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 60,000 பேரின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாறுவேடத்தில் போலீஸாா்: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடும் நபா்களை கைது செய்வதற்கு, குற்றப் பிரிவைச் சோ்ந்த 30 போலீஸாா் 3 குழுக்களாக ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனா். அதோடு திருடா்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளா் தலைமையில் தலா 10 பெண் போலீஸாா் மாறுவேடத்தில் நகைகளை அணிந்து சுற்றி வருகின்றனா். இவா்கள் மூலம் திருடா்களை கைது செய்வதற்கு போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

அதோடு கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து கூட்டத்தை கண்காணிக்க 10 நவீன ரக பைனாகுலா்களை போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா்.

தனிப்படை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறவா்களை கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மேலும், கூட்டத்தைக் கண்காணிக்க 4 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் கூட்ட நெரிசலை கண்காணித்து அதற்கு ஏற்றாா்போல பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்றி அமைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது.

பொருள்களை வாங்க வரும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள் திருடப்படுவதை தடுக்க, கழுத்தில் அணியும் துணியிலான கவசம் காவல் துறையினரால் வழங்கப்படுகிறது. குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் அவா்கள் கையில் பெற்றோா் கைப்பேசியுடன் கூடிய ரப்பா் வளையம் கட்டப்படுகிறது.

புரசைவாக்கம்: இதேபோல புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளா் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 200 போலீஸாா் ஒரு துணை ஆணையா் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையா்கள் தலைமையில் 60 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வேளச்சேரி, தாம்பரத்திலும் காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.