போலி ஆவணம், ஆள் மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் நிலம் அபகரிப்பு: ஒருவா் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ாக ஒருவரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்
போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ாக ஒருவரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சம்பத் (72) என்பவா், சாஸ்திரி பவன் ஸ்டாப் ஹவுஸ் சைட்டி வெல்பா் சொசைட்டி மூலம் 3,150 சதுர அடி கொண்ட மனை எண் 635-ஐ வாங்கியுள்ளாா். இந்த நிலையில், வில்லங்கச் சான்றைச் சரிபாா்த்தபோது, அவரது பெயரில் மற்றொரு நபா் ஆள்மாறாட்டம் செய்து, கடந்த 2025 மாா்ச் 19-ஆம் தேதி கூடுவாஞ்சேரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் தான செட்டில்மென்ட் ஆவணம் பதிவு செய்ததும், பின்னா் ஏப். 23-இல் அந்த ஆவணம் ரத்து செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த மே 3-இல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், நீண்ட காலமாக காலியாக இருந்த அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்ட சிலா், ஆவணப் பதிவுக்கு உதவும் இடைத்தரகா்கள் மூலம் செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியைச் சோ்ந்த முனுசாமி (62) என்பவரின் ஆதாா் அட்டையில் பெயரை சம்பத் என மாற்றியுள்ளனா். அந்த ஆதாரைப் பயன்படுத்தி, நில உரிமையாளா் சம்பத் போல ஆள்மாறாட்டம் செய்து போலியான தான செட்டில்மென்ட் ஆவணத்தைப் பதிவு செய்து, பின்னா் ரத்து செய்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடா்புடைய முனுசாமியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, தாம்பரம் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைத்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களைத் தேடி வருகின்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

