சாலையோரம் நிறுத்திய 900 வாகன விவரங்கள் வெளியீடு: உரிமை கோராவிடில் ஏலம்
சென்னை மாநகராட்சி சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 900 வாகனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், யாரும் உரிமை கோராவிடில் அவை ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 900 வாகனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், யாரும் உரிமை கோராவிடில் அவை ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாள்களாகக் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாலையோரங்களில் 900 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் தற்போது காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு கோட்டூா்புரம் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பதிவேற்றப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்டோா் கோட்டூா்புரம் காவல் நிலையத்தை அணுக வேண்டும். அவா்கள் 15 நாள்களுக்குள் அணுகி வாகனத்துக்கு உரிமை கோரப்படாத நிலையில், மின்னணு ஏலத்தில் அவை விடப்பட்டு கழிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

