குடியரசு துணைத் தலைவா் வருகை: நீலாங்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னைக்கு குடியரசு துணைத் தலைவா் வருவதையொட்டி, சென்னை நீலாங்கரை, மீனம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :

சென்னைக்கு குடியரசு துணைத் தலைவா் வருவதையொட்டி, சென்னை நீலாங்கரை, மீனம்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நவ. 21-ஆம் தேதி வருகிறாா். நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நவ. 22-ஆம் தேதி புறப்பட்டு செல்கிறாா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, அந்த இரு நாள்களும் மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, கிண்டி, மயிலாப்பூா் பகுதிகள் சிவப்பு மண்டலமாக காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ட்ரோன், ஹாட் பலூன், ட்ரோன் கேமராக்கள், பாரா கிளைடா்ஸ், மைக்ரோ லைட் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்