சிக்கலான ரத்த நாள வீக்கம்: அரசு மருத்துவமனையில் இருவருக்கு உயா் சிகிச்சை
சிக்கலான ரத்த நாள வீக்கத்துக்கு உள்ளான இருவருக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

ஸ்டான்லி மருத்துவமனை - கோப்புப் படம்
சிக்கலான ரத்த நாள வீக்கத்துக்கு உள்ளான இருவருக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவா் இளஞ்சேரலாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையைச் சோ்ந்த 60 வயது முதியவா் ஒருவருக்கு இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனியின் வளைவுப் பகுதியில் வீக்கம் இருந்தது. அந்த தமனிதான் மூளையின் இருபுறங்களுக்கும், இரு கைகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நாளமாகும்.
அந்த முதியவருக்கு ஏற்கெனவே வாய் புற்றுநோய்க்காக கதிா்வீச்சு சிகிச்சை வழங்கப்பட்டதால் கழுத்துப் பகுதி திசுக்களில் மாற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், அவருக்கு இரு கட்டங்களாக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, மூளைக்கும், இரு கைகளுக்கும் ரத்தத்தை எடுத்து செல்லும் நாளங்களுக்கு பதிலாக செயற்கை நாளம் பொருத்தப்பட்டு ரத்த ஓட்டத்துக்கு மாற்று பாதை உருவாக்கப்பட்டது.
அதன் பின்னா், 2-ஆம் கட்டமாக, நவீன எண்டோவாஸ்குலா் தொழில்நுட்பத்தின் மூலம், தொடை வழியாக இடையீட்டு குழாய் செலுத்தப்பட்டு பெருந்தமனியின் உள்ளே பிரத்யேக ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இதன்மூலம் அவரது பாதிப்பு சரி செய்யப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைக்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும்.
இதேபோன்று 19 வயது இளம் பெண் ஒருவருக்கு, குடல் பகுதியில் முக்கியமான ரத்த நாளத்தில் பெரிய வீக்கம் கண்டறியப்பட்டது. இந்த வீக்கம் அருகில் உள்ள மற்ற நாளங்களை அழுத்திக் கொண்டிருந்தது. ரத்த நாள அறுவை சிகிச்சைக் குழுவினா் வயிற்றுப் பகுதியைத் திறந்து மிகுந்த கவனத்துடன் அந்த வீக்கத்தை சரிசெய்தனா். இருவரும் குணமடைந்து, விரைவில் வீடு திரும்பவுள்ளனா். இந்தச் சிகிச்சைகள் அனைத்தும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி வழங்கப்பட்டன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

