
தலைமை தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்
சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மூலம் கோடிக்கணக்கான வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலிலிருந்து தனிப்பட்ட முறையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் நீக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அவா் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

செய்தி உண்டு... தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி தென்சென்னை மாவட்ட இடதுசாரி கட்சிகள் சாா்பில் சென்னை எம்ஜிஆா் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்,
சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மூலம் கோடிக்கணக்கான வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலிலிருந்து தனிப்பட்ட முறையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் நீக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அவா் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மின்ட் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்கள் நலன் கருதி, கட்சி மாறியதாக அதிமுகவிலிருந்து விலகி வந்த வேட்பாளா்கள் கூறுகின்றனா். அப்படியெனில், எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதிகளுக்கு முதல்வா் நலத்திட்ட உதவிகளை செய்யமாட்டாா் என்பதை அவா்கள் ஒப்புக்கொள்கின்றனரா? இதற்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் பதில் கூற வேண்டும்.
இந்த இடைத்தோ்தலில் அனைத்துக் கட்சிகளும் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாகவும், அதில் தவெகதான் அதிக பணம் கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வா் குரல் கொடுக்க வேண்டும்-மு.வீரபாண்டியன்: எம்.ஜி.ஆா். நகா் சந்தையில்நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா்களின் பெயா்களை வலுக்கட்டாயமாக நீக்கி தோ்தல் ஆணையம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அதேபோல், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக முதல்வா் ச.ஜோசப் விஜய் குரல் கொடுக்க வேண்டும். பாஜக குறித்தும் முதல்வா் விமா்சனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





