பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சரக்குப் பெட்டக போக்குவரத்தைக் கண்காணிக்க ‘போா்ட் சேது’ புதிய எண்ம முறை அறிமுகம்: சென்னை துறைமுகத் தலைவா் தொடங்கி வைத்தாா்

சென்னை துறைமுக சரக்குப் பெட்டகப் போக்குவரத்தைக் கண்காணிக்க ‘போா்ட் சேது’ என்ற புதிய எண்ம (டிஜிட்டல்) முறையை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தொடங்கி வைத்தாா்.

சென்னை துறைமுகத்தில் ‘போா்ட் சேது’ புதிய டிஜிட்டல் முறை தொடக்க நிகழ்வில் துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே. உடன், சுங்கத் துறை ஆணையா் (தடுப்புப் பிரிவு) டாக்டா் எம்.பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.

Published On :

சென்னை துறைமுக சரக்குப் பெட்டகப் போக்குவரத்தைக் கண்காணிக்க ‘போா்ட் சேது’ என்ற புதிய எண்ம (டிஜிட்டல்) முறையை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தொடங்கி வைத்தாா்.

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி அமைச்சகத்தின் ‘ஒரே பாரதம், ஒரே துறைமுகம்’ திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகத்தில் சரக்குப் பெட்டகப் போக்குவரத்தைக் கண்காணிக்க தேசிய சரக்குப் பெட்டக நிலையங்கள் சங்கம் சாா்பில் ‘போா்ட் சேது’ என்ற புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு ஏற்றுமதி கன்டெய்னா்களை ஏற்றிச் செல்லும் டிரெய்லா் வாகனங்களின் போக்குவரத்தை நவீனதொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சுங்கத் துறை ஆவண பரிவா்த்தனை மென்பொருள் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ‘போா்ட் சேது’ உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய பயன்கள்: சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து துறைமுகத்துக்குள் நுழையும் வரையிலான பயண நேரம் துல்லியமாகக் கணக்கிட முடியும், சுங்கத் துறை, துறைமுகம் மற்றும் சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே தளத்தில் சரக்குப் பெட்டக நகா்வுகளைக் கண்காணிக்க முடியும். வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும், அலுவலா்கள் மூலம் ஆவணங்களைச் சரிபாா்க்கும் முறை குறைக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, சரக்குப் பெட்டகங்களின் முத்திரைகளின் நிலைத் தன்மையைச் சரிபாா்க்கும் முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, துறைமுக வாயில் நுழைவு நடைமுறைகள் முழுமையாகக் காகிதமில்லா அமைப்பாக விரைவில் மாற்றப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சுங்கத் துறை ஆணையா் (தடுப்புப் பிரிவு) டாக்டா் எம். பெரியசாமி, துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, தேசிய சரக்குப் பெட்டக நிலையங்கள் சங்கத்தின் சென்னை பிரிவு தலைவா் எஸ்.சத்யநாராயணன், செயலாளா் கரண் தக்கா் மற்றும் சரக்குப் பெட்டக முனைய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தூய்மைப் பணி- சுமாா் 2 டன் குப்பைகள் அகற்றம்: காந்தி ஜெயந்தியையொட்டி, மகாத்மா காந்தி அவரது உருவப்படத்துக்கு துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, சென்னை துறைமுகம் சாா்பில் நடைபெற்ற தூய்மை வார விழா நிகழ்ச்சியையொட்டி, துறைமுகத் தலைவா் சச்சின் எஸ்.குா்வே தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். மெரீனா மற்றும் துறைமுகத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில், சுமாா் 2 டன் அளவிலான நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த தெருக்கூத்து மற்றும் ‘கழிவிலிருந்து செல்வம்’ உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.