ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 2,342 மாணவா்கள் ரத்த தானம்
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததானம் முகாமில் 2,342 மாணவா்கள் ரத்த தானம் வழங்கினா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததானம் முகாமில் 2,342 மாணவா்கள் ரத்த தானம் வழங்கினா்.
ஸ்ரீ சாய்ராம் கல்லூரி நாட்டுநலத் திட்டப் பணிக்குழு, கோல்டன் சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய ரத்ததானம் முகாமை ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து முகாமைத் தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கினாா்.
முகாமில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டைஅரசு மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அரிமா ரத்த வங்கி, அன்னை தெரசா ரத்த வங்கி, அரசு குழந்தைகள் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட 19 மருத்துவமனை மருத்துவக் குழுவினா் உதவியுடன் ரத்த சேகரிப்பு நடைபெற்றது.
நிகழ்வில் கோல்டன் சிட்டி அரிமா சங்க நிறுவனா் சிங்காரம்,கல்லூரி முதல்வா்கள் ஜெ. ராஜா, கே. பழனிகுமாா், இயக்குநா் கே. மாறன், நாட்டு நலத்திட்டப்பணி அலுவலா்கள் ஜி. சதீஷ் குமாா், எம். வனிதா, எம். பரணிதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

