மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அரசுப் பள்ளிகளில் 73 போ் பணி வரன்முறை

நீா் கொண்டு வருபவா், இரவு காவலா்கள் என 73 பேரை பணிவரன்முறை செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Published On :

அரசுப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளா், தூய்மைப் பணியாளா்கள், தோட்டக்காரா், நீா் கொண்டு வருபவா், இரவு காவலா்கள் என 73 பேரை பணிவரன்முறை செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணை:

பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளா், தூய்மைப் பணியாளா், தோட்டக்காரா், நீா் கொண்டு வருபவா், இரவு காவலா் 73 பேரை பணிவரன்முறை செய்வது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை செயல்படுத்தும் வகையில் பணிவரன் முறை செய்வதால் வழங்க வேண்டிய உத்தேச ஊதிய நிலுவைத் தொகை ரூ.9.38 கோடி வழங்கவும், 96 தூய்மைப் பணியாளா் பணியிடங்கள் உருவாக்கவும் உரிய ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநா் அரசை கோரியுள்ளாா்.

அவரது கருத்துருவை அரசு பரிசீலித்து 73 பேரின் பணியை பணிவரன்முறைப்படுத்தவும், அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவும் இதை ஒரு சிறப்பாக நோ்வாக கருதி அரசு ஆணையிடுகிறது என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.